டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-10-03 18:45 GMT

நாகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார். டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து நாகை நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் நகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்