டெங்கு விழிப்புணர்வு முகாம்

டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-08-27 15:11 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கோட்டை நகராட்சி சார்பில் நகராட்சி துணை இயக்குனா் (சுகாதார பணிகள்) தென்காசி மற்றும் ஆணையாளா் அறிவுறுத்தலின்படி டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம் நடந்தது. நகராட்சி சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியா் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து டெங்கு காய்ச்சல் ஏற்படுதல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. முன்னதாக டெங்கு காய்ச்சல் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்