புதுக்கோட்டைக்கு வந்த டெமு ரெயில் என்ஜினில் பழுது

புதுக்கோட்டைக்கு வந்த டெமு ரெயில் என்ஜினில் பழுதானது.

Update: 2022-12-12 18:42 GMT

திருச்சியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக விருதுநகர் செல்லும் டெமு ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினசரி மாலை 4.50 மணிக்கு புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காரைக்குடி நோக்கி செல்லும். இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து வந்த டெமு ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தபோது என்ஜினில் பழுது ஏற்பட்டு புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்றது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக என்ஜின் பழுது நீக்க முடியாததால், ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு மாலை 5.50 மணிக்கு பின்புறம் உள்ள என்ஜினை கொண்டு மெதுவாக ரெயில் இயக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்