போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி கடலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி கடலூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் கடலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ.மகேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில இளைஞர் சங்க செயலாளர் கோபிநாத், இளைஞர் சங்க செயலாளர் விஜயவர்மன், மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர்கள் பழ.தாமரைக்கண்ணன், தர்மலிங்கம், அசோக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், சசிக்குமார், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாபெரும் போராட்டம்...
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. ஆகவே இதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.