புவனகிரி அருகேமாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்மணல்குவாரி அமைத்து தர கோரிக்கை

புவனகிரி அருகே மணல்குவாரி அமைத்து தர கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-02-21 18:45 GMT


புவனகிரி, 

மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனடியாக அமைத்து தர வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் புவனகிரி அருகே கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டு வண்டி தொழிலாளர் சங்க பகுதி தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் சங்கமேஸ்வரன், மாவட்ட குழு ராஜமாணிக்கம், பொருளாளர் முருகன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின், செல்லையா, கிளாங்காடு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கிளியனூரில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க அனுமதி அளித்தும் இது வரை குவாரி அமைக்காமல் காலம் கடத்தும் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். முன்னதாக குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்