கொல்லம் ெரயில் சிவகாசியில் நின்று செல்லக்கோரிஆர்ப்பாட்டம்

சிவகாசி ரெயில் நிலையத்தில் கொல்லம் ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-24 19:51 GMT

சிவகாசி,

சிவகாசி ரெயில் நிலையத்தில் கொல்லம் ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடுதல் செலவு

சென்னையில் இருந்து கொல்லம் வரை தினமும் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1.50 மணிக்கு சிவகாசியை கடந்து செல்கிறது. ஆனால் இந்த ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நிறுத்துவது இல்லை. விருதுநகர் ரெயில் நிலையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் சிவகாசிக்கு வர வேண்டிய பயணிகள் விருதுநகரில் இறங்கி வேறு வாகனங்கள் மூலம் சிவகாசிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவும், நேர விரயமும் ஆகிறது.

ஆர்ப்பாட்டம்

நள்ளிரவு நேரம் என்பதால் விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு போதிய பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் நடுத்தர குடும்பத்தினர் கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்களில் சிவகாசிக்கு வர விருப்பம் இல்லாமல் அதிகாலை 6 மணிக்கு வரும் பொதிகை ரெயிலில் சிவகாசிக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்தநிலையில் கொல்லம் ரெயிலை சிவகாசி ரெயில் நிலையத்தில் நிறுத்த கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிவகாசி ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

மாவட்டக்குழு உறுப்பினர் மரியராஜ், நகர செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபாரத் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்