கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசும், உயர் கல்வித் துறையும் அரசாணை எண்-5ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும். இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். எம்.பில், பி.எச்டி படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வும், 4 ஆண்டுகளாக நடத்தாத பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் அய்யர் மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் நேற்று வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கழகத்தின் கிளை செயலாளர் அன்பரசு தலைமை தாங்கினார். கிளை தலைவர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.