நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-22 16:44 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் அருள் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கதிர்நிலவன், சாதிக், வேங்கை தமிழ்செந்தில், ரமணி, இளையராஜா ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்