உழவன் செயலி குறித்து செயல்விளக்க நிகழ்ச்சி
உழவன் செயலி குறித்து செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.
நீடாமங்கலம்:
தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் திருவாரூர் மாவட்டம் நார்த்தங்குடி கிராமத்தில் உழவன் செயலி குறித்து செயல்விளக்கம் அளித்தனர். உழவன் செயலில் மானியத்திட்டங்கள், பயிர்க்காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, இடுபொருள் முன்பதிவு, வானிலை அறிவுரைகள், சந்தை விலை நிலவரம் போன்று 21 வகையான செய்திகள் இருப்பதாக விளக்கி கூறினர். மேலும் நார்த்தங்குடி மக்களின் ஸ்மார்ட் போன்களில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதை பயன் படுத்தும் முறை குறித்தும் விளக்கினர்.இதில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.