கலெக்டர் அலுவலகம் முன்பு 5-ந் தேதி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுமான தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-26 18:21 GMT

மாத ஓய்வூதியம்

பெரம்பலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் மற்றும் உடல் உழைப்பு சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் கலந்து கொண்டு பேசினார். ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும், நலவாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நல வாரிய மனுக்களை சமர்ப்பிக்கவும் அனுமதிக்க வேண்டும்.

முறைசாரா உடல் உழைப்பு தொழிலாளர் அனைவருக்கும் வேலை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிடங்களில் மற்றும் எங்கு விபத்து மரணம் நிகழ்ந்தாலும் நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளில் இருந்து நிலுவைத்தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

வருகிற 5-ந் தேதி...

மாவட்ட கலெக்டர் தலைமையிலான முறைசாரா தொழிலாளர் கண்காணிப்பு குழுக்களை மாதம் தோறும் கூடுவதை உறுதிப்படுத்த வேண்டும். இயற்கை மரண நிவாரணம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவைகளின் விலைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.கட்டுமான பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும். சட்டப்படி உடலுழைப்பு தொழிலாளர் அனைத்து சங்க ஆலோசனை குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சங்கத்தின் மாவட்ட தலைவராக அழகரும், செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக அருண்குமாரும், நிர்வாக குழு உறுப்பினர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்