கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜாபர் சாதிக், காசிரங்கன், ஜோதி, ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி எரிவாயு தகன மேடையை சுற்றி மலை போல் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், தகனமேடைக்கு செல்லும் நுழைவுவாயிலில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.