தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம்
தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வைகை அணையில் மீன் பிடிக்கும் உரிமையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவன தலைவர் சங்கிலி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மீன்பிடி உரிமையை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.