தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வாலாஜாவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-03 18:44 GMT

வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குபேரன், ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அருணகிரி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் கலைசெல்வி கோரிக்கை குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட தலைவர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

ஆர்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப நல ஓய்வூதியம், டி.ஏ. வழங்கிட வேண்டும், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் வனிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்