ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நெமிலியில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-12 11:34 GMT

நெமிலி

நெமிலி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெமிலி வட்டக்கிளை தலைவர் சுரேந்திரநாத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் உத்தமன், ஜெயபால், செல்வரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வனத்துறை காவலர்கள், கிராமப்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டம் அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் செயற்குழு உறுப்பினர் காசி, இணைச்செயலாளர் ஜானகிராமன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்