பா.ஜ.க.வின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-09-06 18:40 GMT

தமிழக பட்டியல் சமூக மக்களுக்காக மத்திய அரசு சார்பில் எஸ்.சி.எஸ்.டி. திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவு செய்யாமல், வேறு திட்டங்களுக்கும், மீதி தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய தி.மு.க. அரசை கண்டித்து கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று கரூர் மாவட்ட பா.ஜ.க.வின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கரூர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் கரூர் மாவட்ட பட்டியல் அணி மாநில பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட துணைத்தலைவர் செல்வன், செயலாளர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், உண்டியலில் காசு போட்டு அதனை சென்னை தலைமை செயலகத்திற்கு அனுப்பும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்