அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-24 18:45 GMT

நாடு முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்கள் மற்றும் உறுப்பினர்களை சோதனை என்ற பெயரில் அத்துமீறி கைது செய்த மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமையை கண்டித்து ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து ஜமாத், இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் செய்யது முஹமது இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜிக் ரஹ்மான் தொடக்க உரையாற்றினார். மனிதநேய ஜனநாயக கட்சி பாரூக், ஆதி தமிழர் கட்சி பாஸ்கரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் செயலாளர் சிராஜ்தீன், தமிழர் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், ஐக்கிய ஜமாத் மதுரை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முஹமது யாசின், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பேச்சாளர் ஜாகீர் உசேன், நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை அனீஸ் பாத்திமா, த.மு.மு.க. இஸ்லாமிய பிரசார பேரவை மில்லத் பிர்தௌஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், இந்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி செய்யது ஜமாலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஜமாத் பிரமுகர்கள், அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் நிர்வாகிகள், இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பாப்புலர் பிரண்ட் நகர் தலைவர் முஹமது கனி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்