மரக்கன்றுகள் பராமரிப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
கல்வராயன்மலையில் மரக்கன்றுகள் பராமரிப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
தமிழக முதல்-அமைச்சரின் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் கல்வராயன்மலையில் உள்ள கோமுகி வன சரகத்தில் செம்மரம், தேக்கு மற்றும் பல்வேறு வகையான மூலிகை மரக்கன்றுகள் உள்பட சுமார் 5000 மரக்கன்றுகள் வகைகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள், பரிகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை மரக்கன்றுகள் வளர்க்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மரக்கன்றுகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது, எத்தனை வகையான மரக்கன்றுகள் உள்ளன. மரங்களின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கோமுகி வன சரகர் பசுபதி மற்றும் வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.