கையில் சட்டி ஏந்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கையில் சட்டி ஏந்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-28 18:23 GMT

அரியலூர் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்ட நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கையில் சட்டி ஏந்தியும், நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட 10 பேருக்கு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்