மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் முறை குறித்த செயல் விளக்கம்

தக்கோலம் பேரூராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் முறை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-06-11 14:35 GMT

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சியில் நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பு தூய்மை திட்டப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் செயல் முறை விளக்க நிகழ்ச்சி தக்கோலம் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் நடந்தது.

அதில் பங்கேற்றவர்களுக்கு இடைேய பழங்கள், வாழை இலை மற்றும் பூக்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கும் கழிவு பொருட்களை கொண்டு உரம் உற்பத்தி செய்வது குறித்து செய்து காண்பித்து விளக்கினர்.

தக்கோலம் பேரூராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை தாங்கி பேசுைகயில், 'நவீன தொழில்நுட்பத்தில் தக்கோலம் பேரூராட்சியில் பயன்பாடற்ற மக்கும் குப்பைகள் மூலம் விவசாயிகளுக்கு பயனுள்ள உரத்ைத உற்பத்தி செய்யும் வகையில் செயல்படுத்தி பயன்பெற வேண்டும், என்றார்.

பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சொக்கலிங்கம், வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்