போலீஸ் நிலையம் முன்பு அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த நிர்வாகி கைது செய்ததை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-12-26 18:45 GMT

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடிநெல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். அ.ம.மு.க. சுற்றுச்சூழல் அணி மாவட்ட நிர்வாகியான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் செந்தில், அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி வேதாரண்யம் பகுதியை சேர்ந்த தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கோபிகிருஷ்ணன், வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் போலீசார், சென்னைக்கு சென்று போரூரில் இருந்த செந்திலை நேற்று கைது செய்தனர். இதை கண்டித்து வேதாரண்யம் போலீஸ் நிலையம் முன்பு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன், நகர செயலாளர் லிங்கேஸ் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செந்திலை போலீசார் வேதாரண்யம் அழைத்து வராமல் நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அ.ம.மு.க.வினரின் திடீர் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்