அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம்

வந்தவாசியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடந்தது.

Update: 2023-08-03 11:35 GMT

வந்தவாசி

மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 9-ந் தேதி மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி வந்தவாசி தேரடியில் உள்ள தபால் அலுவலகம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் இன்று நடைபெற்றது.

தொ.மு.ச. மண்டல பொதுச் செயலாளர் க.சவுந்தரராஜன் தலைமை தாங்கி, 9-ந் தேதி நடைபெற உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.

இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்