தேனீ வளர்ப்பு செயல்விளக்க கூட்டம்

தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-31 17:19 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே சாக்கோட்டை பகுதி விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்க கூட்டம் மேல மணக்குடி கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகஜெயந்தி மற்றும் கமலகண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டி கொடுத்து ஆலோசனைகளை வழங்கினர். வேளாண்மை அலுவலர் மங்கையர்க்கரசி, உதவி வேளாண்மை அலுவலர் சோலைராஜன், தேனீ பெட்டி, இடம் தேர்வு மற்றும் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் செய்தனர். நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்விஎஸ்தர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்