நெல்லையில் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-29 18:53 GMT

திசையன்விளை அப்புவிளையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தையா என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நெல்லை டவுன் வாகையடிமுனையில் ஆணவ படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்