மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுக்கூரில், ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுக்கூரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-29 19:30 GMT

மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அங்கு நடந்த பெண்கள் வன்கொடுமைகளை கண்டித்தும், மணிப்பூரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுக்கூரில் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பாக ஆர்ப்பட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட செயலாளர் மருதுகுமார் தலைமை தாங்கினார். போஸ் ராஜன் வரவேற்றார். இதில் கட்சி தலைவர் ஜீவானந்தம், பொதுச்செயலாளர் தங்ககுமரவேல், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த மாரிமுத்து, கவிமுருகன், மதுக்கூர் கோபி, வக்கீல் தங்க தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அமைப்பாளர் ராஜ. பெரமையன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்