கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விவசாய தொழிலாளர் அணி சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். டிஜிட்டல் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பழ ஆசைத்தம்பி, ஒன்றிய செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.