கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-02 17:39 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆல் இந்தியா ஆக்சன் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சந்திர வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய பொது செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரசார செயலாளர் புஷ்பராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இணை தலைவர் சுக்கன்லோகு, பழனிசாமி, மாவட்ட துணை தலைவி புஷ்ப காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கவுரவ தலைவர் அருள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்