ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-23 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அரசூரணி தென்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் தங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் அரசு ஏமாற்றி வருவதாகவும், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் ஆகியோரை கண்டறிந்து உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்