போதை பொருட்களை ஒழிக்க கோரி அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.
சென்னை
பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை காலை போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை காலை 11 மணிக்கு நடைபெற கூடிய போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.