வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-28 19:58 GMT

ஆவுடையார்கோவில்:வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆவுடையார்கோவில் வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம், ஆவுடையார்கோவில் கடைவீதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கூத்தப்பெருமாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் நெருப்பு முகேஷ், மாட்டு வண்டி சங்க மாவட்ட தலைவர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். அரசு உடனடியாக இந்த ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி அமைக்க வேண்டும். ஆவுடையார்கோவில் பகுதியில் லாரி மற்றும் டிராக்டரில் மணல் கடத்துபவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சில போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்