சர்வீஸ் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி ஆர்ப்பாட்டம்

சர்வீஸ் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-21 19:43 GMT

திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி பால்பண்ணை சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், சண்முகம், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை வரை சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை விரைந்து அமைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். சர்வீஸ் ரோடு அமையும் வரை திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2010-ம் ஆண்டு முதல் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கும், உடல் ஊனமுற்ற குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சர்வீஸ் சாலை அமைக்கும் வரை வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் மல்லிகா, பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜசேகர், எஸ்.டி.பி.ஐ. ரஹ்மத்துல்லாஹ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்