தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-28 18:52 GMT

இளையான்குடி

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஜெயந்தி, மலைராஜ், பரிசுத்தமங்களசாமி, சந்தியாகு, ராஜா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்திடவும், தேர்தல் வாக்குறுதிப்படி வேலை நாட்களை 150- நாட்களாக உயர்த்தவும், தினக்கூலியாக ரூ.381 வழங்கிடவும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மணியம்மா, முத்துராமலிங்க பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் அமலி ஆரோக்கிய செல்வி, ஒன்றிய செயலாளர் ராஜு மற்றும் விவசாய சங்க மகளிர் குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்