நாட்டாறு பாலத்தை கட்டி தரக்கோரி ஆர்ப்பாட்டம்

நாட்டாறு பாலத்தை கட்டி தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-07-04 17:36 GMT

குத்தாலம் அருகே உள்ள ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பரமசிபுரம்-பருத்திக்குடி இடையே செல்லும் நாட்டாறு பாலத்தை இடித்து பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்கும் அதிகாரிகளை கண்டித்தும், அந்த பாலத்தை உடனடியாக கட்டி தரக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய குழுவை சேர்ந்த முரளி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.





Tags:    

மேலும் செய்திகள்