அரசு மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அரசு மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-06 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை நாடாளும் மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, ஜனநாயக திராவிட முன்னேற்ற கழகம், தென்பெண்ணை ஆறு பாதுகாப்பு இயக்கம், கரிகால சோழன் பசுமை மீட்புப்படை மற்றும் ஏனாதிமங்கலம் கிராம மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஏனாதிமங்கலத்தில் ஓடும் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளும் மக்கள் கட்சி நிறுவன தலைவர் அக்னிசெல்வராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலாஜி வரவேற்றார். ஜனநாயக திராவிட முன்னேற்ற கழக தலைவர் சரவணகாசன், நாடாளும் மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ராஜீவ்காந்தி, விஸ்வநாதன், தென்பெண்ணை ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹேமராஜன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்கள் செல்வம், பேச்சிமுத்து, தென்பெண்ணை ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா, கரிகால சோழன், பசுமை மீட்புப்படை தலைவர் அகிலன் உள்பட பலர் கலந்துகொண்டு அரசு மணல் குவாரியை உடனடியாக மூடக்கோரி கண்டன உரையாற்றினர்.

இதில் சாமிநாதன், பாஸ்கர், பூபாலன், ஆனந்தபாபு, பாலகிருஷ்ணன், அசோக்குமார், சிலம்பரசன், தனசேகரன், பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வக்கீல் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்