பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல்விளக்க முகாம்
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்க முகாம் நடத்தினர்.
மானாமதுரை,
மானாமதுரையில் உள்ள பள்ளிகளில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்க முகாம் நடத்தினர். வரும் 24-ந் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் இருந்தாலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மானாமதுரை செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான குழுவினர் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக தள்ளி நின்று வெடிக்க வேண்டும், பெரியவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக தண்ணீர், மணல் உள்ளிட்டவைகள் அருகில் வைத்து கொள்ள வேண்டும், தீப்பிடித்தால் ஈர துணிகள் உள்ளிட்டவைகள் கொண்டு அணைக்க வேண்டும் என செய்து காட்டியதுடன் அது குறித்த விழிப்புணர்வு நோட்டீசும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.