விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியானா வன்முறையை கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-02 21:00 GMT

கூடலூர்

அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தை சீர்குலைக்கும் வகையில் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சுனில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரியானா வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரத்னம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்