கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-22 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சற்குணம் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தகுமார், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட பொருளாளர் நேரு, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் முத்துப்பேட்டை கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குனர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவை கணக்கீட்டு உத்தரவு வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதிய நிலுவை கணக்கீட்டு உத்தரவு வைக்காமல் வழங்கிட வேண்டும். தூய்மை காவலர்கள் மாத ஊதிய நிலுவை வைக்காமல் வழங்கிட வேண்டும். எடையூர் ஊராட்சியில் மாதம் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர. இதில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்