கிராம ஊராட்சி களப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிராம ஊராட்சி களப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-11 18:45 GMT

நாகை மாவட்ட கலெகடர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் அனைவருக்கும் விடுபடாமல் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். நிலுவை ஊதியம் முழுவதையும் பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும். இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட தலைவர் வெற்றிசெல்வன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்