கிராம உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலத்தில் கிராம உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலம்:
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யூ.சி.) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றியத்தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் காந்தி, மாவட்ட தலைவர் சாந்தகுமார், பொருளாளர் நேரு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கிராம ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.