கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேச பெருமாள் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசி யதாக உதவி கலெக்டரை கண்டித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் பாலமுருகன், வட்டத் தலைவர் ஆதிலட்சுமி, வட்ட செயலாளர் மாரி முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.