கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் உத்திரகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஏழுமலை கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.