கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-26 19:30 GMT

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கலைச்செல்வன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்