கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-13 19:09 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பெரம்பலூர் வட்டார கிளை சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டார கிளை தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனடியாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதே போல் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய வருவாய் வட்டாட்சியர்கள் அலுவலகங்கள் முன்பும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்