பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மனித உரிமை ஆணைய தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
மனித உரிமை ஆணைய தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த கோரி மயிலாடுதுறையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு.மகேஷ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தேர்தல் பணிக்குழு மாநில துணை செயலாளர் ஆக்கூர் செல்வரசு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் காவிரிநாடன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆணைய தீர்ப்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.