பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லூரில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-04 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் இளவரசு, மாவட்ட அமைப்பாளர் வக்கீல் அறவாழி, ஒன்றிய துணை செயலாளர்கள் புரட்சிமணி, அரசூர் சமத்துவன், மாவட்ட துணை அமைப்பாளர் காந்தலவாடி மும்மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்