மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துபழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வட்டார தலைவர் ரமணி தலைமை தாங்கினார்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், மத்திய மற்றும் அம்மாநில அரசை கண்டித்தும், தமிழகத்தில் பழங்குடியினர் தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுவதையும், அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்தறு.
இதில் சங்க நிர்வாகிகள் சித்ரா, ஏழுமலை, தங்கம், பூபதி, பவுனம்மாள், பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டனர்.