கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 78 புதிய வட்டங்களில் சார்நிலை கருவூலங்களை உருவாக்க வேண்டும், உயர் அலுவலர்களிடமிருந்து வரும் பணி அழுத்தத்தை குறைக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வு பட்டியலை உரிய நேரத்தில் வெளியிட வேண்டும். கருவூல ஊழியர்கள் மத்தியில் நல்ல பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.