போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-25 13:36 GMT

போக்குவரத்து தொழிற்சங்கங்ளான சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., டி.டி.எஸ்.எப். சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத் தலைவர் மயில்வாகனன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. கன்வீனர் கேசவன், மாநில துணைப் பொதுச்செயலாளர் தண்டபாணி ஆ௳ியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு 2014-ம்ஆண்டு முதல் அகவிலைப்படி வழங்க வேண்டும், ஓய்வு பெறும் காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை எதுவும் வழங்காமல் இருப்பதை கண்டித்தும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றியமைப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தர்மபுரி பணிமனை செயலாளர் முகுந்தன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்