இளைஞர் பெரு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இளைஞர் பெரு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ. எஸ். ஐ. மருத்துவமனை முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.

பங்குச்சந்தையில் சொத்து மதிப்புகளை உயர்த்தி காண்பித்து பல லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆ்ர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்