சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-06-06 17:18 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஜெய்பீம் புரட்சிப் புலிகள் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் நந்தன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்த மனுவில், "தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 601, 604-வது வார்டுகளில் எலிகள் தொல்லை உள்ளது. கடந்த 25-ந்தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 3 பேரை எலி கடித்துள்ளது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தன

அதுபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்ல உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அன்பழகன், ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்