ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலை ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து, அந்த மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பணி மாறுதல் செய்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தோைச மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். கிளை துணைத்தலைவர் தர்மர், அரசு ஊழியர் சங்க கிளைத்தலைவர் சண்முகராஜ், நிர்வாகிகள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.